பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

59


கொடுக்கிறது. 'சா' என்றால் சாவுயென்றும் 'தம்' என்றால் கொடை, பங்கிடுதல் என்றும் பொருள் இருக்கிறது. ஆத்திரத்தோடும், அவசரத்தோடும் சாப்பிடுகிற சாதமானது, சாப்பிடுபவரை சாவுக்குக் கொடையாகக் கொடுக்கிறது. சாவுச் சஞ்சலத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் சஞ்சலத்தைக் கொடுக்கிறது.

ஆகவே சாதம் சாப்பிடலாம் என்று சொல்லுகிற போது நாம் மிகவும் ஜாக்கிறதையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பாடும், சாதமும், சஞ்சலத்தை கொஞ்சியழைக்கும் சாகசப் படைப்புகளாகும். ஆக, எப்படித்தான் உண்ணுகிற பண்டத்தைச் சொல்வது என்கிற ஒரு கேள்வி எழுகிறது.

உணவு என்பது, உண்+அவ்=என்று பிரிகிறது. உண் என்றால் ரசித்து, அவ் என்றால் விரும்பி, அதாவது உட்கொள்கிற உணவை முதலில் ரசிக்கவேண்டும். அடுத்து விரும்ப வேண்டும். பிறகு உட்கொள்ள வேண்டும். இப்படி செய்கிறபோது. மனதால் விரும்புவதும், உடலிலுள்ள ஐம்புலன்களால் ரசிப்பதும் ஆகியவை நடக்கிறபொழுது மனமும், உடலும் நாம் உண்பதை மனமாற ஏற்றுக் கொள்கிறது.

உட்கொள்கின்ற உணவு வயிற்றுக்குள்ளே வருகிறபோது அதை வாஞ்சையுடன் வரவேற்கவும், வந்ததை நிறைவாகச் செரிமானம் செய்வதற்கும், வயிற்றிலுள்ள ஜீரண அமிலங்கள் தயாராகிவிடுகின்றன. அதனால்தான் உணவை உட்கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.