பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உணவை எங்கிருந்து எப்படிப் பெறுவது?

1. வீட்டிற்குள்ளே உண்ணும் பண்டத்தைப் பெற்றாலும், அல்லது வெளிப்பகுதிகள், கடைகள், ஹோட்டல்கள் போன்றவைகளில் வாங்கினாலும், உணவை வாங்குகிறயிடம் சுத்தமான பகுதியா, சுகாதாரப் பிரதேசமா என்று கவனித்துக் கண்காணித்து உங்களுக்கு அது தூய்மையான இடந்தான் என்று துணிவுடன் முடிவு செய்த பிறகே வாங்க வேண்டும்.

2. நீங்கள் உணவை வாங்குகிற பாத்திரம் நன்றாக அலம்பிச் சுத்தமாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்கிப் பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள உணவுப் பண்டத்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்க விரும்புகிறபோது, அதுவும் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் வந்தால், உடனே சுத்தப்படுத்தித்தான் பயன்படுத்த வேண்டும்.

3. எப்பொழுதும் வீட்டு நபர்கள் உண்ணும் உணவை ஒரு புறம் பத்திரமாக வைக்க வேண்டும். நீங்கள் வளர்க்கின்ற செல்லப்பிராணிகளுக்குச் சமைத்திருக்கிற உணவை இதன் அருகில் வைக்கவோ, கலந்துவிடுதலோ நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செல்லப் பிராணிகளுக்குத் தனிப் பாத்திரமும், தனியிடமும் இருந்தால் சிக்கல்கள் நேராமல் தவிர்க்கலாம்.

4. நீங்கள் உணவைத் தயாரிக்க முயற்சிக்கிற சமயத்தில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யவேண்டும். வீட்டு அறைகளைக் கூட்டினாலும் சரி,