பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

61


கழிவறைகளைச் சுத்தப்படுத்தினாலும் சரி, அல்லது வேறுயெந்த வெளிவேலையைச் செய்திருந்தாலும் சரி, கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வது மிக முக்கியம். உங்கள் குழந்தைகளும் உங்களைப் பின்பற்றிச் செய்கிறார்களா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

கைகளில் காயங்கள், சிராய்ப்புகள் இருந்தாலும், அவற்றைத் திறந்தாற் போல் வைத்துக் கொண்டு சமைக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது. அவைகளில் கட்டோ, பேண்டேஜோ போட்டுக் கொள்ளலாம். எப்பொழுதும் உணவை, சூடாக இருப்பதுபோல் வைத்து உண்ணுவதுதான் சிறந்த பழக்கம். ஆறிப் போனால் கூடச் சூடுபடுத்துவதற்குச் சோம்பல் படக்கூடாது. அதுபோல வெளியில் இருந்து வாங்கிவருகிற ஆறிய பண்டங்களைக் கூடக் சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லது.

உணவு உட்கொள்வதற்கு முன் இப்படியாகச் சுத்தமான முறையில் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். இனி எவ்வாறு, சுகாதாரமாகச் சாப்பிடுவது என்பதை தொடர்ந்து காண்போம்.

சுகாதாரமாக உண்ணும் முறைகள்

கூடிய எடை மிகுதியால் உடல் குண்டாக இருப்பவர்கள், மிகவும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும். உணவை உட்கொள்வதற்கு விரும்ப வேண்டும். உண்ணும் உணவில் அதிகமாக கிறீம். வெண்ணை, கிறீம் பிஸ் கட், ஐஸ்கிறீம் - போன்ற கவர்ச்சிப் பண்டங்களைக் கைகளால் ஒதுக்கித்