பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

63


நீங்கள் மாமிச உணவுப் பிரியரென்றால், அடிக்கடி மாமிச உணவு உட்கொள்வதை நிறுத்த வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள், ஒருவேளை மட்டும் உண்பது, உங்கள் வயிற்றுக்கும், உடலுக்கும் நல்லது. அதிக சுவையாக இருக்கின்ற வறுத்த மாமிசத்தை சாப்பிடுவதைவிட அதனை வேகவைத்து உண்பது விவேகமான காரியமாகும்.

அதிகமாகக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகப் புரோட்டீன் சத்து இல்லாத காய்கறிகளை உண்பது நல்லது.

உணவுக்குப்பின் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது உடம்பை நலமாகக் காக்கும்.

உணவும் ஒவ்வாமையும் (Alleagiess)

உணவு ஒவ்வாமை என்பது ஏதோ ஒரு வேண்டாத உணவுப் பொருளை விரும்பிச் சாப்பிட்டதால் ஏற்படுகிற ஒன்று, நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், உங்கள் உடம்பிலுள்ள தற்காப்புப் படை, மிகச் செளகர்யமாக ஜீரணம் செய்து காப்பாற்றுகிறது. அந்தக் காப்பாற்றலையும் மீறி ஏற்படுகிற கஷ்டம்தான் ஒவ்வாமையாகும். நீங்கள் சாப்பிடுகிற உணவில் தேவையான புரோட்டீன் சத்து இல்லையென்றால் இப்படி ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது.

ஒவ்வாமையில் இரண்டு வகையுண்டு.

(1) மென்மையாகத் தாக்கும் ஒவ்வாமை

(2) கடுமையாகத் தாக்கும் ஒவ்வாமை