உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


முட்டை, பால், சோயாபீன்ஸ், காபி, டீ, சாக்லட், வாழைப்பழம், ஆரஞ்சு, போன்ற பொருள்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவைகளாகும். உங்கள் மருத்துவரை அணுகித் தேவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

உணவும் - வகைகளும்

உங்களுக்கு களைப்பில்லாமல் வேலை செய்ய, கட்டுடலோடு வளர, உழைத்துப் பழுதுபட்ட செல்களைச் சரிசெய்து வலிமைப்படுத்த உணவு அவசியம்.

உங்களுக்கு ஒருநாள் தேவை 2100 - லிருந்து 2800 கலோரிகள் வரை.

60.75 கிராம் புரோட்டின்

65.85 கிராம் கொழுப்புச்சத்து

310.385 வரை மாவுச்சத்து

1. புரோட்டீன்

உணவுவகையில் உடம்புக்கு ஆதாரமாக விளங்குகிற முக்கியமான சக்தி தருவது. உடலின் அடிப்படை ஆதாரமாக விளங்குகிற செல்கள், திசுக்கள். இவைகள் வளர்வதற்கு உதவுகின்றன. உழைப்பினால் பழுதுபட்ட உறுப்புக்களைச் செப்பனிட்டுச் செம்மையாக்குகின்றன. உழைப்பால் நைந்துபோன திசுக்கள், தசைகள் இவைகளை மாற்றி புதியனவற்றைப் பிறப்பிக்கவும் இது உதவுகிறது.