பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சமையல் எண்ணெய் வகையறாக்கள், வெண்ணெய், நெய், செயற்கை வெண்ணெய், பருப்பு வகைகள், பிஸ்கட்டுகள், பாலாடைக் கட்டிகள் எல்லாம் மிகுதியான கொழுப்புச்சத்தைக் கொண்ட உணவு வகைகள் ஆகும்.

உணவு எப்படிச் சாப்பிட வேண்டுமென்று, மனித இனத்தின்பால் பேரன்பு கொண்ட விஞ்ஞானிகள் உணவு எப்படி அமைய வேண்டுமென்று கண்டுபிடித்து நமக்காகக் கூறியிருக்கிறார்கள்.

நாம் உண்ணுகிற உணவிலே,

12 % புரோட்டீன்

58 % மாவுச்சத்து

30% கொழுப்புச்சத்து

இதை நீங்கள் எப்படிக் கடைப்பிடிக்கப் போகிறீர்கள்?

நாம் அன்றாடம் உண்ணும் உணவிலே உள்ள உணவுப் பொருள்களில், புரோட்டின், மாவுச்சத்து, புளிப்புச்சத்து எந்த அளவிற்கு இருக்கிறதென்று ஒரு பட்டியலைக் கீழே தந்திருக்கிறோம்.