பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருள்:

தேங்காய் எண்ணெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி, ஆட்டுக்கறி மற்றும் கொழுப்பு, மாட்டுக்கறி மற்றும் கொழுப்பு, கோழிக்கறி அதன் தோல்பகுதி, முட்டைகள், வேர்க்கடலை, ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய் போன்றவைகள் கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருள்களாகும்.

உங்களுக்குக் கொழுப்புச்சத்து ஒரு நாளைக்கு 65 முதல் 85 கிராம் வரைதான் இருக்கவேண்டும். கீழே கொடுத்திருக்கும் பட்டியலில், நீங்கள் உண்ணுகிற உணவில் எத்தனைகிராம் கொழுப்பு இருக்கிறது என்று குறித்து இருக்கிறோம். நீங்கள் தேர்ந்து எடுக்கிற உணவில் கொழுப்புச் சத்து 85 கிறாமிற்கு மேல் போகாமல், பொறுப்போடும், கவனத்தோடும், எச்சரிக்கையோடும் உண்ண வேண்டும்.

உணவுப் பொருள்கள் கொழுப்பு கிராம்
1. உருளைக்கிழங்கு அவித்ததும் வறுத்ததும் 0.1
2. கோழியிறைச்சி 4
3. மீன் வகைகள் 6
4. வெண்ணெய் அல்லது செயற்கை எண்ணெய் 8
5. சப்பாத்தி 10
6. பாதாம்பால் 10
7. ஐஸ்கிறீம் 13
8. சாக்லட் சிறிய அளவு 15
9. வறுவல் வகைகள் 17
10. பன்றியிறைச்சி 20
11. கருவாடு, உப்புக்கண்டம் 20
12. வறுத்த பன்றிக்கறி 25
13. சமோசா 26