பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

71


உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள உயிர்ச்சத்தான வைட்டமின்கள் தேவை. விட்டமின்கள் பலவகைப்படும். விட்டமின் பற்றிய விளக்கத்தையும், அது எப்படி உடலைக் காக்க உதவுகிறது என்பதையும், எந்தெந்த உணவு வகையில் அது கிடைக்குமென்பதையும் கீழே கொடுத்திருக்கிறோம்.

1. A. விட்டமின்:

உடலுக்கு அழகையும், மெருகையும், கவர்ச்சியையும் தந்து காப்புறையாக விளங்குகின்ற தோலின் வளர்ச்சிக்கும், கண்களின் தெளிவான தேர்ச்சிமிகு பார்வைக்கும் உதவுகிறது.

ஈரல், வெண்ணெய், பால், முட்டையின் மஞ்சள்கரு, மீன், எண்ணெய் வகைகள், செயற்கை வெண்ணெய் இவற்றில் A - வைட்டமின் மிகுதியாகக் கிடைக்கிறது.

B1 விட்டமின்:

நீங்கள் உண்ணுகிற உணவை உடலுக்குள் சக்தியாக மாற்றுகிற சாமர்த்தியம் நிறைந்தது. உடலின் அடிப்படை ஆதாரமான செல்கள் உயிர்காற்றை அதிகமாக உறிஞ்சி ஜீவிக்கும் சக்தியைத் தருகிறது. காடிச்சத்து, தானிய வகைகள், சிற்றுண்டி பணியாரம், ஈரல், பன்றிக்கறி, பால், பாலாடைக்கட்டி, பச்சைக் காய்கறிகள் இவற்றில் இந்த B1 விட்டமின் நிறையக்கிடைக்கிறது.

6 விட்டமின்:

சுகாதாரமான பற்களுக்கும் , நல்லவளமான ஈறுக்கும், உடம்பிலுள்ள சிவப்பு இரத்த அணுக்களுக்கும்