பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

73


வெண்ணெய், பால், முட்டைகள், மீன் வகைகள் வளமான செயற்கை வெண்ணெய் இவற்றில் D - விட்டமின் நிறையக் கிடைக்கிறது. சூரிய வெளிச்சமானது. மனித தேகத்தில் படும்போது, அந்த தோல்பகுதியே D-விட்டமின் சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறதென்பது விசேஷமான செய்தியாகும்.

E-விட்டமின்:

உடலிலுள்ள இரத்தம் தூய்மையாகவும், உடலிலுள்ள செல்கள் பலமுள்ளதாகவும் வளர்க்கிற பொறுப்பை E விட்டமின் ஏற்றிருக்கிறது.

தாவர எண்ணெய்கள், பருப்பு வகைகள், தானிய வகைகள், பலகாரங்கள் மற்றும் கீரை வகைகளில் விட்டமின் E மிகுதியாகக் கிடைக்கிறது.

K-விட்டமின்:

நல்ல தரமும், திறமும், நலமும், வளமுமிக்க இரத்தம் நமது உடலில் உலாவருவதற்கு இந்த K-விட்டமின் உதவி உற்சாகப் படுத்துகிறது.

பச்சைக் காய்கறிகள், சோயா பீன்ஸ், தக்காளி, தேன், இறால், முட்டையின் மஞ்சள்கரு, கோதுமை வகைகள் ஆகியவற்றில் மிகுதியாகக் கிடைக்கிறது.

மேலே கூறிய விட்டமின்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தேவையைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வேண்டிய அளவிற்கு உணவுப் பண்டங்களை உண்டு, உங்கள் உடம்பின் உதவாத சதைகளை ஒடுக்கிவிட்டு, மிடுக்காக வாழ்ந்து மேன்மை பெருங்கள்.