பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடற்பயிற்சியிலே மூன்று வகைகள் உண்டு.

1. மெது ஓட்டம் ஓடுதல் (Jogging and Slow Running)

2. சுவாசத்தை மிகுதிப்படுத்தும் உடற்பயிற்சிகள் (Aeroling Exercises)

3. விறுவிறுப்போடு பங்குபெரும் விளையாட்டுக்கள். (Active Games)

1. மெது ஓட்டப் பயிற்சிகள்:

உடற்பயிற்சி செய்வதே, உடல் இயக்கத்தை சற்று அதிகப் படுத்துவதற்குத் தான். நீங்கள் உடலியக்கத்தை உறுதியாகப் பின்பற்றி, தொடங்கியதுபோலவே, தொடர்ந்து செய்து கொண்டு வருகிறபொழுது, உங்களுக்கு நெஞ்சுரம் (semena) அதிகமாகும்.

நெஞ்சுரமென்பது சீக்கிரம் களைப்படையாமல் நீண்டநேரம், சுறுசுறுப்பாக இருக்கும் சக்தி வாய்ந்த, தரமான தன்மையாகும். நெஞ்சுரமானது ஒரு மணி நேரத்தில் அல்லது ஒரே நாளில் வந்து விடுவதல்ல. வாரக்கணக்கில், விழிப்போடும், பொறுப்போடும் இருந்து தொடருகிறபோதுதான் நெஞ்சுரம் நிறைவாகக் கிடைக்கும்.

அதற்காக ஒரே நாளில் மூன்று மணி நேரம் அல்லது முடிகிற வரை செய்து விடுவது என்ற வெறித்தனமான வீராப்புடன் செய்வது பலவிதமான துன்பங்களைப் பிறப்பிக்கும். ஒரு நாளைக்கு, காலையிலோ, மாலையிலோ, வசதிப்பட்ட நேரத்தில், வயிறு காலியாக இருக்கிற சமயமாக ஒரு இருபது நிமிடம் என்று