பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

79


அல்லது புல்வெளி இவற்றின் மீது ஓடினால் நல்லது. ஏனென்றால், முழங்கால்களுக்குக் கீழேயுள்ள, கெண்டைக்கால் எலும்புகளுக்கு வலியேற்படாமல் இருப்பதற்காகத்தான் கடினமான தரையில் ஓடக்கூடாது.

2. குனிந்துகொண்டு ஓடாமல், முதுகை நேராக நிமிர்ந்திருப்பதுபோல வைத்துக் கொண்டு ஓடவும். சுவாசத்தைச் சீராகச் செய்யவும். மூச்சு இழுப்பதையும், மூச்சு விடுவதையும், நீங்கள் ஒடுகிற பிரதேசப் பகுதி தூய்மையானதாக இருந்தால், வாய் வழியாகவும் சுவாசித்து வெளிவிடலாம். சுவாசிப்பதில் பதட்டமோ, படபடப்போ வருவதைத் தவிர்க்க வேண்டும்.

3. ஓடும் பொழுது உங்களது காலின் குதிகால் முதலில் தரையில் படுவதுபோல் ஊன்றி, அதன்பிறகு முன்பாதத்தைத் தரையில் பதிக்கவும். இப்படிச் செய்கிறபோது உங்கள் உடல் எடை முதலில் குதிகாலில் விழுந்து, பிறகு முன் பாதத்திற்குக் கடத்தப்படுவதால், கால்களுக்கு வலிஏற்படாமல் இருக்கும்.

4. கைகளை முழங்கை மடிய மடித்து மார்புக்குப் பக்க வாட்டில் தளர்வாக வைத்துக் கொண்டு ஓடவும். முழங்கைகள் மடிந்து சிறிது முன்னே இருப்பதுபோல வைத்துக் கொண்டு ஒடுகிறபொழுது, உடல் அமைப்பின் நிலை சீராக அமையும்.

5. ஒவ்வொரு முறையும் மெது ஓட்டத்தைத் துள்ளித் துள்ளி ஓடுகிறபொழுது கைகளுக்கும், ஒரு இசைவான அசைவைக் கொடுத்தால், உடல் உறுப்புக்கள் உள் அதிர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருக்கும்.