பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


6. நீங்கள் மெது ஓட்டம் ஓடுவது என்று முடிவெடுத்த பிறகு, அது உங்களது நெஞ் சுரத்தை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் என்று உறுதியாக நம்ப வேண்டும். அதற்கான வழிமுறைகளை பட்டியல் போட்டுக் கொண்டு, திட்டமாக அமைத்து, அதைத் தொடர வேண்டும்.

7. அருமையான ஒரு முடிவை எடுத்துக்கொண்டு விட்டோம் என்று எண்ணிக் கொண்டு, ஆர்வக்கோளாறு காரணமாக அதிக தூரமோ அல்லது அதிக நேரமோ ஓடிவிடாதீர்கள். பொதுவாக, ஓடுகிறதூரத்தை ஒருகிலோ மீட்டர், இரண்டு கிலோமீட்டர் என்று ஓடுகிறதுரத்தின் எல்லையை முதலில் குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்பொழுது அசதி ஏற்படுகிறதோ அல்லது இனி ஓட முடியாது என்று எண்ணம் தடை செய்கிறதோ, அப்பொழுதே ஓடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

8. வாரத்திற்கு ஐந்து நாட்கள் ஓடினால் போதும். இந்த ஐந்து நாட்களிலும், உங்கள் உடலுக்கு ஏற்படுகிற, பதமான, இதம் நிறைந்த தன்மையைப் பொறுத்தே, தூரத்தையும், நேரத்தையும் மிகுதிப் படுத்துவதை மேற்கொள்ள வேண்டும்.

9. நீங்கள் கன்னா பின்னாவென்று உடையணிந்து கொண்டோ, இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆடைகளை அணிந்தோ மெது ஓட்டம் ஓடுவது நல்லதல்ல. உங்கள் உடலுக்கு ஏற்றாற்போல, வசதியாக அமைந்திருப்பது போன்ற உடையை அணிந்துகொண்டு வெறுங்காலில் ஓடாமல், குதிகால்