பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

81


உயரமுள்ள ஷூக்களை அணியாமல், கேன்வாஸ் ஷீ அணிந்து கொண்டு ஓடவேண்டும்.

10. முதலில் எடுத்த எடுப்பிலேயே ஓடத் தொடங்காமல் மெதுவாக நடந்து, பிறகு வேகமாக நடந்து, பின்னரே மெது ஓட்டம் ஓட வேண்டும். ஒரு நாளைக்குப் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மெது ஓட்டம் ஓடலாம்.

ஆனாலும், அவ்வப்பொழுது ஓடுவதற்கு ஓய்வு தந்து, ஒருநிமிடம் இடைவேளை கொடுத்து, உடலை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. ஓடுகிறபோது நீங்கள் உடல் வலி என்று உணர்ந்தாலும், மூச்சு முட்டுகிறது என்ற நிலை ஏற்பட்டாலும், உடனே ஓடுவதை நிறுத்திவிடுங்கள். அதற்குப் பிறகு, உங்கள் மனது சம்மதித்து உங்கள் உடலும் முடியும் என்று ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஓடுவதைத் தொடரலாம்.

11. இப்படியாக ஒரு இதமான சூழ்நிலை ஏற்படுவதற்கு பல வாரங்கள் கூட ஆகலாம். நீங்கள் ஒவ்வொரு நாளும் நேரத்தை அதிகப்படுத்த முயற்சித்துக் கொண்டே வரவேண்டும்.

12. நீங்கள் எடுத்துக் கொள்ளுகிற பதினைந்து நிமிடங்களை, ஓய்வுகொடுக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகி விட்டால், பிறகு நீங்கள் ஒடுகின்ற துரத்தையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

கடைசியாக ஒன்று. நீங்கள் மெது ஓட்டம் ஓடுவதற்கு எவ்வாறு உடலைப் பதமாக்கிக் கொண்டீர்களோ,