பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதுபோல ஓட்டத்தை முடிக்கும் பொழுதும் மெதுவாக நடந்து உடல் சூட்டைத் தனித்துக் கொள்ள வேண்டும். (Cool Down)

2. சுவாசத்தை மிகுதிப்படுத்தும் உடற்பயிற்சிகள் (Aero / B / C Exercises)

சுவாசத்தை மிகுதிப் படுத்தும் உடற்பயிற்சிகள் என்பது, அமெரிக்கன் டாக்டர் கென்னத் கூப்பர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட உடற்பயிற்சியாகும். இந்த சுவாசப் பயிற்சியின் முக்கிய நோக்கமானது, ஏதாவது ஒரு உடற்பயிற்சியைத் தீவிரமாகச் செய்து, மிகுதியாகச் சுவாசிக்கச் செய்து, நுரையீரலாகிய காற்றுப் பைகளைக் காற்றால் நிரப்பி விடுவதுதான். இதனால் உங்களது இதயமும் நுரையீரல்களும் அதிகமாக இயங்கி, அதன் மூலமாக இரத்த ஒட்டம் உடல் முழுவதும் ஓடி முடித்துத் திரும்புவதற்கு உதவுவதால், உடலிலுள்ள, செல்களும், தசைகளும் மிகுதியாக உயிர்க் காற்றைப் பெற்றுக் கொள்கின்றன.

ஏரோபிக் எக்ஸர்சைஸ் என்று அழைக்கப்படுகிற பயிற்சிகள் இதயத்தை வலிமை உடையதாக மாற்றுகின்றன. சுவாச முயற்சிகளுக்குச் சுகமான துண்டுதல்களாகவும் அமைகின்றன.

ஏதாவது ஒரு உடற்பயிற்சியை இந்த இயக்கத்தின் விதமும், ரிதமும் குறையாமல் 15 நிமிடம் முதல் 1 மணி வரை தொடர்ந்து நிகழ்த்தும் முறைதான் சுவாசத்தை மிகுதிப் படுத்துதலாகும். இந்த முறைப் பயிற்சியானது இதயத்துக்கு நெஞ்சுரத்தையும், நிறைய வலிமையையும்