பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

83


அளிப்பதுடன், நீண்டநேரம் களைப்பில்லாமல் செயல்படவும் வைக்கிறது.

சாதாரண நடைப் பயிற்சியிலிருந்து, கடுமையான காடு, மலையோட்டம் (Cross Country Running) ஓடுகிற வரை ஏதாவது ஒரு பயிற்சியைச் செய்யலாம். நீங்கள் எந்த மாதிரி ஓட்டத்தையோ விளையாட்டையோ தேர்ந்தெடுத்தாலும், நீங்கள் வாரத்திற்கு மூன்று நாட்களாவது, அதாவது மூன்று முறையாவது தொடர்ந்து செய்து வரவேண்டும் என்பது முக்கியமாகும்.

கீழே பலவிதமான சுவாசத்தை மிகுதியாக்கும் பயிற்சி முறைகளையும், விளையாட்டுக்களையும், அவைகளின் பெயர்களையும் தந்திருக்கிறோம். அவற்றை எவ்வாறு செய்வது என்பதனையும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்து எடுத்துச் செய்யுங்கள்.

1. சைக்கிள் ஓட்டுதல்: (Cycling)

சாலையில் சைக்கிள் ஓட்டலாம். அல்லது பயிற்சிக்காகவென்று தயாரிக்கப்பட்ட சைக்கிளில் ஏறி அமருங்கள். அதை மிதித்துப் பயிற்சி செய்யலாம். எந்தச் சைக்கிளைப் பின்பற்றினாலும், தொடர்ந்து முடிந்தவரை பத்து நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாகச் சைக்கிள் ஓட்டிப் பயிற்சி செய்யவும்.

2. மெதுஓட்டம்: (Jogging)

நீங்கள் நின்ற இடத்திலே நின்றுகொண்டு, மாதிரி ஓட்டம் அதாவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்