84
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
சைக்கிளை மிதித்து ஒட்டுவது போல, நின்ற இடத்திலேயே ஓடவும். ஆனால் வெளியில் வந்து ஒடுகிறபொழுது, உங்களுக்குப் பல காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ஓடினால் சுகமாகவும் இருக்கும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆகவே, வெளிப்புறத்தில் ஒடுவது நல்லது.
3. நீச்சல்: (Swimming)
உடல் வலிமைக்கும், நெஞ்சுரத்திற்கும், உடல் நெகிழுந்தன்மைக்கும் சிறந்த உடற் பயிற்சி என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயிற்சியே நீச்சல் பயிற்சியாகும். உடலிலுள்ள உறுப்புக்கள் அனைத்தையும் உற்சாகமாக இயக்கி விடுவதுடன், உரிய பயன்களையும் உடனே அளிப்பதால், நீங்கள் நிறைய நேரம் நீச்சல் பயிற்சியைச் செய்வது, நீங்கள் எதிர்பார்த்த பலன்களை நிறையவே தரும் என்று நம்பலாம்.
4. கயிறுதாண்டிக் குதித்தல்: (Skipping)
சீரான இயக்கத்துடன் கைகளைத் தலைக்குமேலே போகவிட்டுப் பிறகு காலுக்குக் கீழே கயிறு வரும்போது தாண்டிக்குதித்துச் செய்கிற திறமான பயிற்சிமுறையிது. இரண்டுகைகளிலும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் கொண்டு வந்து இயக்குகிற போது, அதனுடன் சேர்ந்து துள்ளிக் குதித்துத் தாண்டுகிறபோது, நிறையவே சுவாசிக்க வேண்டியிருக்கிறது.
நீங்கள் இடையிடையே நிறுத்தாமல் , அல்லது கயிற்றிலே கால்கள் சிக்கித் தடுமாறி விடாமல்களைப் படையும் வரை நீங்கள் கயிறு தாண்டிக்