குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?
85
குதித்தலைச் செய்து கொண்டேயிருந்தால், சுவாசத்தை மிகுதிப்படுத்தும், சக்தியைப் பெற்றுக்கொள்ளலாம்.
5. படகு செலுத்துதல்: (Rowing)
சிறுசிறு படகுகளில் ஏறியமர்ந்து கொண்டு, தானே தனியாக இயக்கிச் செலுத்துதல், அல்லது நான்கைந்து பேர்கள் ஒரு அணியாகச் சேர்ந்து கொண்டு படகோட்டுதல். இதைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும்போது, பரந்து விரிந்த மார்பு உண்டாக வழியேற்படும். வலிமையுள்ள புஜங்கள். நெடுநேரம் களைப்பின்றி உழைக்கின்ற திறன்கள் எல்லாமே இதில் மிகுதியாகக்கிடைக்கும்.
6. டென்னிஸ்: (Tennis)
வாய்ப்பும் வசதியும் இருந்தால் டென்னிஸ் விளையாடலாம். வீட்டிலே விளையாட வசதியிருந்தால் இறகுப் பந்தாட்டம் விளையாடலாம். நிறைய வசதி இருந்தால் சுவரடிப் பந்தாட்டம் (Squash) ஆடலாம். இதுபோன்ற விளையாட்டுக்கள் எல்லாம் அதிக வேகத்தோடும் , ஆற்றலோடும் , அளப்பறிய சக்தியோடும் ஆடவேண்டியிருப்பதால், உடலிலுள்ள வியர்வையை எல்லாம் விரைவாக வெளியேற்ற உதவும். தேவையில்லாத ஊளைச் சதைகள் குறைந்து, தோற்றத்திலும் ஒரு அற்புத மாற்றத்தையும் உருவாக்கும்.
7. நாட்டியம்: (Dancing)
ஒரு அறையில் ஒலி நாடாவை ஓடவிட்டு, அதன் இசைக்கேற்ப நளினமாகவும், உடல் நெகிழும் வண்ணம் திறமாகவும் ஆடினால், இது ஒரு சிறந்த தேகப்