பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

89


முழங்கால்களை குத்துக்கால் போட்டிருப்பது போல உயர்த்தி குதிகால் தரையில் படும்படி வைத்திருக்கவும், உங்கள் கால்களும், முழங்கால்களும் ஒட்டிக் கொண்டிருக்காமல் கொஞ்சம் இடைவெளிவிட்டு வைத்திருக்கவும்.

நன்றாக ஆழ்ந்து மூச்சிழுத்துக் கொள்ளுங்கள். கால்களை நகர்த்தாமல் வயிற்றுப் பகுதியை மேலே உயர்த்திக் கொண்டே வாருங்கள். இவ்வாறு உங்களால் முடிந்த அளவு உயரம் வரை, இருப்பையும், வயிற்றையும் உயர்த்தி வைத்திருங்கள் பிறகு முன்புபோல, படுத்துக் கொண்டு மூச்சை விடவும். இதுபோல் பதினைந்து முறை செய்யவும் இந்தப் பயிற்சியானது வயிற்றுக்கும். இடுப் பின் பின்புறப் பகுதிக்கும் சிறந்த பயிற்சியாக அமையும்.

2. கால்களை உயர்த்துதல்: (Leg Lifts)

மல்லாந்து படுத்துக் கொண்டு கைகளை கழுத்துப் பகுதியில், பின் தலைப் பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள். இடது காலை தரையில் வைத்துக் கொண்டு, வலது காலைத்தூக்கி முழங்காலால் மார்பைத் தொடுவதுபோலக் கொண்டுவாருங்கள். அதே நிலையில் கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் முழங்கைகளால்