பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

91


முகத்தால் தொட முயற்சிக்கவும். அதன்பிறகு முன்புறம் கொண்டுவந்த முழங்காலைப் பின்புறம் எவ்வளவு நீட்டி வைத்துக் கொண்டு இருக்க முடியுமோ அப்படி நீட்டுகிறபோது, தலையை மேற்புறமாக உயர்த்தவும். இதனால் முதுகெலும்பு நன்றாக நிமிர்ந்து இயங்குவதால், இரத்தவோட்டம் அந்தப் பகுதிக்கு மிகுதியாகச் செல்ல உதவுகிறது. முதுகெலும்பு வலிமை பெறவும் செய்கிறது.

4. குனிந்து கால்களைத் தொடுதல் (Toe Touching)

நன்றாக நிமிர்ந்து நின்று கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி எவ்வளவு உயரமாக நிற்க முடியுமோ அந்த அளவிற்கு முன்பாதங்களால் நிற்கவும். அடுத்து நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு அப்படியே முன் புறமாகக் குனிந்து வந்து, முழங்கால்களை மடக்காமல், கால் கட்டை விரல்களைத் தொடவும்.

குறிப்பு: கட்டை விரல்களைத் தொட முயற்சிக்கும் போது, முன்பாதங்களால் நிற்க முடியாது போனால் குதிகால்களில் நிமிர்ந்து நிற்கவும்.

பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, பயிற்சியை முடிக்கும் பொழுது