பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மூச்சை மெதுவாக விடவும். ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது பதினைந்து முறையாவது செய்யவும்.

குனிந்து கால்களைத் தொடும் பொழுது, உங்கள் முதுகுப் பகுதி மற்றும் தொடைப் பகுதி தசைகளை சுண்டி இழுப்பது போல் இருந்தால். நீங்கள் இந்தப் பயிற்சியை சரியாகச் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

5. உட்கார்ந்து குனிதல் (Knee Touching)

கால்களை நீட்டி முதலில் உட்கார்ந்து, பிறகு முழங்காலை மடித்து இரண்டு பாதங்களும் சேர்வது போல வைத்துக் கொண்டு அமரவும். இரண்டு கனுக்கால்களையும், இரண்டு கைகளால் பற்றிக் கொண்டு பயிற்சிக்குத் தயார் ஆகவும்.

அடுத்து நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு முன்புறமாகக் குனிந்து வந்து, மூக்கால் அல்லது முன்நெற்றியால் பாதங்களைத் தொட முயற்சிக்கவும். உட்கார்ந்த பிறகு மூச்சு விடவும்.

குறிப்பு: குனிந்து பாதங்களைத் தொடுகிற பொழுது, அவசரப்பட்டு முடியாத பொழுதும், கஷ்டப்பட்டுக் கொண்டு குனியக் கூடாது. முதலில் எவ்வளவு