பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

93


முடியுமோ அவ்வளவு தூரந்தான் முன்புறம் குனிய வேண்டும்.

6. பின்புறமாகக் குனிதல் (Back Bending)

முழங்கால்களில் அமர்ந்து, இடுப்பிற்கு மேற்பகுதியை நிமிர்த்தி நேராக வைத்து நிற்கவும். கைகளைப் பக்கவாட்டில் வைத்திருக்கவும். பிறகு நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு கைகளை நேராக உயர்த்தி தலைக்கு காதோரமாகக் கொண்டு வந்து அப்படியே பின்புறமாக எவ்வளவு தூரம் வளைய முடியுமோ அவ்வளவு தூரம் வளையவும்.

பிறகு முன்போலவே இருந்த நிலைக்கு வந்து மூச்சை விடவும். இது போல் பதினைந்து முறை செய்யவும்.

குறிப்பு: எவ்வளவு தூரம் பின்புறம் வளைய முடியுமோ அவ்வளவு தூரந்தான் முயற்சி செய்யவேண்டும். உடலை வலிந்தோ, வற்புறுத்தியோ கஷ்டப்படுத்தியோ செய்யக் கூடாது. இந்தப் பயிற்சியானது, வயிற்றுத் தசைகளுக்கும், தொடைகளின் தசைகளுக்கும் நல்ல வலிமையைத் தரக்கூடியதாகும்.