பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


7. சுவற்றுடன் ஒரு பயிற்சி (Wall Practice)

சுவற்றுக்கு இணையாக உங்கள் கை நீள அளவில் நிற்கவும். இடது கை உள்ளங் கையால் சுவற்றை அழுத்திக் கொள்ளவும். வலது கையால் வலதுகால் கணுக்காலைப் பிடித்துக் கொண்டு முழங்கால் அளவு வளைந்து நிற்கவும். இதுதான் பயிற்சியின் ஆரம்ப நிலை. பிறகு நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு கணுக்காலைப் பிடித்திருக்கும் வலது கையால் மேலும் காலை உயர்த்தி, வலது குதிகாலால் வலது பிட்டத்தைத் (Back) தொடுவது போலத் தொடவைக்கவும். தொட்டு ஓரிரு வினாடிகள் கழித்து ஆரம்ப நிலைக்கு வந்து மூச்சை விடவும்.

அதேபோல் வலது கையைச் சுவற்றில் பதித்தபடி பதினைந்து தடவை பயிற்சியைச் செய்யவும்.

8. சுவற்பயிற்சி (Wall Exercise)

கைகள் நீள அளவிற்கு சுவருக்கு முன்னால் முன்பயிற்சிபோல் நிற்கவும். கையளவு தூரத்தில் நின்ற பிறகு, இரண்டு உள்ளங் கைகளாலும், சுவற்றை