பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

95


அழுத்திப் பிடித்து நிற்கவும். பிறகு நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு கைகளால் சுவற் றைத் தள்ளுவதுபோல, முன்பாதங்களால் நின்று கொண்டு, கைகளை மடக்கி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுத்திப் பயிற்சியைச் செய்யவும். (படம் பார்க்க) அழுத்தும்போது தலை முதல் பாதம் வரை உடல் ஒரு நேர்க்கோட்டில் இருப்பதுபோல விரைப்பாக நிற்கவேண்டும். இவ்வாறு பத்து அல்லது பதினைந்து முறை தொடர்ந்து செய்க.

பேரன்பிற்குரிய பிரியமானவர்களே, புத்தகம் முழுவதையும் படித்து முடித்திருக்கிறீர்கள். உங்கள் நிலமையும், எங்கள் ஆலோசனையும் நன்றாகப் புரிந்திருக்கும் என்று நம்புகி றோம். உடலுக்கு வந்திருக்கும் எடை கொஞ்சம் கூடுதல்தான் என்றால், கவலைப்படுவதால் மட்டும், கூடிய சதையைக் கரைக்க முடியாது. காரியத்தில் இறங்க வேண்டும். நீங்கள் இயற்கையைப் போல இயங்கிக் கொண்டேயிருங்கள். உறங்கும் நேரம் தவிர, உடலுக்கு உழைப்பைத் தந்து கொண்டே இருங்கள்.