பக்கம்:குதிரைச் சவாரி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பான். ஆனல், அவர்கள் என்ன சொல்வார்களோ 'ஒரு குதிரைக்காரனுடனா. சேருவது' என்று கோபித்துக்கொண்டால்...? அதனால்தான் மோஹன் இதை அவர்களிடம் கூறவில்லை, மறைத்தே வைத்திருந்தான்.

ஒரு நாள் மாலை-சுமார் நான்கு மணி இருக்கும் - ‘டக் டக்’ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த முனுசாமி சத்தம் கேட்டு விழித்தான். உடனே எழுந்து வந்தான்; கதவைத் திறந்தான். எதிரே நின்றது வேறு யாரும் அல்ல! நம் மோஹன்தான்!

“என்ன அண்ணா, மணி நாலு ஆகிறதே நேரம் தெரியாமல் துரங்கிவிட்டாயா!” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் மோஹன்.

“ஆமாம் தம்பி, இரவு சினிமாவுக்குப் போயிருந்தேன். அதனால் நல்ல தூக்கம். உன் சத்தம் கேட்ட பிறகுதான் எழுந்தேன்.”

“சரி அண்ணா, எல்லோரும் கடற்கரையிலே கூட்டமாக நிற்பார்கள். நேரம் அதிகம் ஆகிவிட்டது.”

“ஆமாம், தம்பி, நான் முகத்தைக் கழுவிக்கொண்டு. அந்த மூலைக்கடையிலே "டீ" குடித்துவிட்டு வருகிறேன். நீ குதிரை இரண்டையும் ஒட்டிக்கொண்டு முன்னாலே போ. என்ன, சரிதானா?” என்றான் முனுசாமி.

“ஓ, அப்படியே” என்றான் மகிழ்ச்சியுடன் மோஹன், குதிரைகளின் கடிவாளங்களைக் கையில் பிடித்துக் கொண்டான். ஆனந்தமாகக் கடற்கரையை நோக்கிக் குதிரைகள் இரண்டையும் ஒட்டிச் சென்றான்.

வழியிலே பல தெருக்களைக் கடந்துதான் கடற்கரைக்குச் செல்ல வேண்டும். ஒரு தெருவில் நாலைந்து துஷ்டப் பையன்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் மோஹனையும், குதிரைகளையும் கண்டார்கள். ஒரு சிறு பையன் இரண்டு குதிரைகளை ஒட்டிக்கொண்டு வருவதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/14&oldid=496024" இலிருந்து மீள்விக்கப்பட்டது