பக்கம்:குதிரைச் சவாரி.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குதிரைகள் சென்ற திசைகளில் ஒன்றை நோக்கி ஒடினான்; இங்குமங்கும் தேடினான். பயனில்லை ! பிறகு, மற்றொரு குதிரை சென்ற தெருவழியே சென்றான். அங்கும் தேடியலைந்தான். குதிரை கிடைக்கவில்லை.

வெகு நேரம் தேடினான். இரவும் வந்துவிட்டது. அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அழுகை அழுகையாக வந்தது.