பக்கம்:குதிரைச் சவாரி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவன் முன்பு பார்த்த முனுசாமியாக இல்லை; அவன் முகம் கடுகடுப்பாக இருந்தது. குரலில் சாந்தம் இல்லை.

“டேய் மோஹன்” என்று அப்பா கூப்பிட்டார்.

இதையெல்லாம் கம்பிகளின் இடுக்கு வழியாகக் கவனித்துக்கொண்டிருந்த மோஹனின் உடல் நடுங்க ஆரம்பித்தது. கைகால்களெல்லாம் தந்தி அடித்தன. சர்வ நாடியும் ஒடுங்க, “ஏனப்பா!” என்று அழுது கொண்டே முன்னால் வந்தான்.

அப்பா நடந்தவற்றை விசாரித்தார். ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் நடந்தது நடந்தபடியே மோஹன் சொன்னான்.

மோஹன் சொல்லி முடித்ததும், “இப்போது என்ன சொல்கிறீர்கள்? என் பிழைப்பிலே மண்ணப் போடப் பார்க்