பக்கம்:குதிரைச் சவாரி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்பாவுக்கு ஆபீஸ் விடு முறை. அவர் அவனைப் பார்த்து, “மோஹன், இன்று நாம் கடற்கரைக்குப் போவோமா? வா, போகலாம்” என்றார்.

மோஹனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. முனுசாமி ஞாபகம் வந்துவிட்டது.

“ஒரு வேளை முனுசாமி, பழைய குதிரைகள் போனால் போகிறது என்று புதிதாகக் குதிரைகள் வாங்கியிருக்கிறானோ என்னவோ......யார் கண்டது? கடற்கரையில் அவன் என்னைப் பார்த்துவிட்டால் சும்மா விடுவானா?” என்று எண்ணினான், உடனே, அவனுடைய பயம் அதிகரித்தது.

வேண்டாம் அப்பா, எனக்கு விட்டிலே உட்கார்ந்து கதை படிப்பதில்தான் ஆசை. கடற்கரையிலே என்ன அப்பா இருக்கிறது?’ என்று தட்டிக் கழித்துப் பார்த்தான் மோஹன்.

ஆனால் அப்பா விடவில்லை. “இந்த வயதிலே நன்றாக ஒடி ஆடி விளையாட வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருக்கலாமா! வா, போகலாம்,” என்று விடாப்பிடியாக அவனை அழைத்துக்கொண்டு சென்றார்.

இருவரும் கடற்கரையை நெருங்கிவிட்டார்கள். மோஹன், அப்பாவின் பின்னால் மறைந்து மறைந்து வந்து கொண்டிருந்தான். முனுசாமி எங்கேயாவது தன்னைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு. கடற்கரையை நெருங்கியதும்,

மோஹனின் அப்பா, “டேய், டேய், மோஹன், அதோ பாரடா; இரண்டு பிள்ளைகள் குதிரைச்சவாரி செய்கிறார்கள்!” என்றார் ஆச்சரியத்துடன்.

மோஹன் உடனே சட்டென்று நிமிர்ந்தான். அப்பா குறிப்பிட்ட திசையை நோக்கினான். இரண்டு குதிரைகள் வருவதைக் கண்டான். ஒவ்வொன்றின்மீதும் ஒவ்வொரு பையன் உட்கார்ந்திருந்தான். மோஹன், குதிரைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/25&oldid=496034" இலிருந்து மீள்விக்கப்பட்டது