பக்கம்:குதிரைச் சவாரி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இருபது காசுதானே ? சரி, வா. இன்றைக்கு எப்படியாவது உன்னைக் குதிரைமேல் ஏற்றிவிடவேண்டும்” என்று கூறிக்கொண்டே அவனை அழைத்துச் சென்றார்.

மோஹனுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. ஆனாலும் அவன் சும்மா இருக்கவில்லை.

“வேண்டாம், ஆப்பா. போயும் போயும் இந்தக் குதிரைச் சவாரிக்கா இருபது காசு கொடுப்பது ? இந்தப் பணம் இருந்தால், வீட்டுக்கு ஏதாவது சாமான் வாங்கலாமே!... அங்கே பாரப்பா, ஒரே கூட்டம்! காசைக் கொடுத்தாலும் காத்துக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு மணி மூன்று மணி நேரங்கூடக் காத்திருக்க வேண்டும். குதிரைக்காரன் தயவு வைத்தால்தான் உண்டு. காசையும் கொடுத்து ஏன் நாம் அவனைத் தாங்க வேண்டும்?” என்று பெரிய மனிதன் போலப் பேச ஆரம்பித்தான்.

மோஹன் இப்படித் தட்டிக் கழிப்பதன் காரணம் அந்த அப்பாவுக்கு எப்படித் தெரியும் ? ‘ஏதோ நம்மாலே அதிகமாக ஒன்றும் பண்ண முடியாது போனலும், இருபது காசு கூடவா செலவழிக்க முடியாது. இன்றைக்கு எப்படியாவது மோஹனைக் குதிரைமேலே ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை. மற்றக் குழந்தைகளெல்லாம் சந்தோஷமாகக் குதிரைச் சவாரி செய்கிறபோது, பாவம், மோஹன் மட்டும் சும்மா இருக்கலாமா?’ என்று எண்ணினார். இதனால்தான் அவர் அவ்வளவு பிடிவாதமாக மோஹனை அழைத்துச் சென்றார்.

குதிரைகள் புறப்படும் இடத்தை நோக்கி இருவரும் சென்றுகொண்டிருந்தார்கள். அங்கே குதிரைக்காரன் நடுவே நின்றுகொண்டிருப்பதை மோஹன் பார்த்து விட்டான். உடனே, பயம் அதிகரித்தது. அப்பாவின் பின்னால் ஒளிந்துகொண்டே நடக்கலான். அடிக்கடி, குதிரைக்காரன் என்ன செய்கிறான் என்று தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டே சென்றான். இருவரும் மிகவும் சமீபத்தில் சென்றுவிட்டார்கள், அப்போது குதிரைக்கார முனுசாமி எப்படியோ மோஹனக் கண்டுவிட்டான்!

உடனே, “தம்பி ! தம்பி மோஹன் ' என்று சத்தம் போட்டுக்கொண்டே முனுசாமி மோஹனின் அருகில் ஓடி