பக்கம்:குதிரைச் சவாரி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உடனே, குதிரைகள் வரும் திசையை நோக்கி ஓடினான். சமீபத்தில் வந்ததும் குதிரைமேல் இருப்பவர்கள் யாரென்று நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது! அவர்கள் வேறு யாருமில்லை. மோஹனுடைய வகுப்பில் படிக்கும் கண்ணப்பனும் அவன் தங்கை கமலாவும்தாம்! அவர்கள் குதிரைகளின் மேல் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தார்கள்.

“டேய், கண்ணா!” என்று கூப்பிட்டான் மோஹன்.

கண்ணப்பன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“டேய், கண்ணா! கண்ணா!” என்று மறுபடியும் கூப்பிட்டான்.

குதிரைமேல் செல்லும் கண்ணப்பனுக்கு, தரைமேல் நிற்கும் மோஹனைப்பற்றி என்ன கவலை! முன்பின் தெரியாதவனைப் போலவே போய்க்கொண்டிருந்தான். ஆனாலும், அதற்காக மோஹன் கவலைப்படவில்லை, அவர்கள் எங்கே போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். குதிரைகளின் பின்னலேயே சென்றான்.

அந்தக் குதிரைகள் மெதுவாக நடக்கவும் இல்லை; மிக வேகமாக ஓடவும் இல்லை. நடுத்தர வேகத்திலே சென்றன. மோஹன் அவற்றை விடாமல் பின் தொடர்ந்தான்.

குதிரைகள் கடற்கரையில் சிறிது தூரம் சென்றன. பிறகு, முன்பு புறப்பட்ட திசையை நோக்கி ஓடி வரலாயின. அப்போதும், நமது மோஹன் சளைத்தானா? இல்லை. அவற்றைப் பின் தொடர்ந்தான்.

குதிரைகள் இரண்டும், ஒர் இடத்திற்கு வந்ததும் கின்றுவிட்டன. அங்கே ஒரு குதிரைக்காரன் நின்றன். அவனுடன் ஏராளமான குழந்தைகள் நின்றார்கள். சில பெரியவர்களும் நின்றார்கள். குதிரைகள் அங்கே வந்து நின்றதும், குதிரைக்காரன் கண்ணப்பனையும், கமலாவையும் கீழே இறக்கிவிட்டான்.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/6&oldid=496014" இலிருந்து மீள்விக்கப்பட்டது