பக்கம்:குதிரைச் சவாரி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 அவர்களை இறக்கிவிட்டதுதான் தாமதம்; “இந்தாப்பா, இந்தப் பையனை ஏற்றிவிடு” என்றார் ஒருவர்.

“நாங்கள்தாம் முதலிலே வந்தோம். இவளை முன்னாலே ஏற்றிவிடப்பா” என்றார் இன்னொருவர்.

“எவ்வளவு நேரந்தான் காத்துக்கொண்டேயிருப்பது?” என்று சலித்துக்கொண்டார் வேறு ஒருவர்.

இப்படியே ஒவ்வொரு தகப்பனாரும், அவரவர் குழந்தையை அந்தக் குதிரைகள்மேல் ஏற்றிவிடப் போட்டி போட்டார்கள். இதைப் பார்த்ததும், மோஹனுக்கு ஒன்றும் புரியவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தான்.

“அதெல்லாம் அவசரப்படக் கூடாது. நான் இஷ்டப் பட்டவர்களைத்தான் ஏற்றிவிடுவேன்” என்று கண்டிப்பாகக்

5