பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16.pdf/305

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அடிகளார் உவமை நயம்
293
 

கடவுளும் பிரிக்கப்படாதவர்கள். மேலும், இறைவன் எந்த இடம் என்று வரையறுத்துக் கூற இயலா வண்ணம் நடு, கீழ், மேல் ஆகிய எல்லா இடங்களிலும் கலந்து உறைகின்றார். அது மட்டுமல்ல-யாவுள்ளுந் தங்கியிருக்கிறான் என்றும் குறிப்பிடுகின்றார். யாவுளும் என்பதனால் உயிரின வேறுபா டின்றி, இழிவு உயர்வு வேறுபாடின்றி கலந்து உறைகின்றான் என்பது பெறப்படுகிறது. இந்தக் கருத்தை விளக்க எள்ளும் எண்ணெயும் போல என்ற உவமையை எடுத்தாளுகின்றார். எள்ளுக்கு எண்ணெய் இடவேறுபாடின்றி, ஒன்றித்து இருக்கிறது. உள் உலகம் உலகப் பொருள்கள். எண்ணெய்இறைவன் எள்ளினுள் எண்ணெய் கலந்திருந்தாலும் வெளிப் படையாகத் தெரியா வண்ணம் மறைந்தே இருக்கிறது. அதுபோல இறைவன் உயிர்களுக்குள் உறைதலை எளிதற் காணமுடியாதவாறு மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக் கின்றன. வலிய முயற்சிகளால் தோலையும் சக்கையையும் நீக்கிக் கடையும்பொழுது தோலும் சக்கையும் ஒதுங்கி எண்ணெய் வெளிப்படுகிறது. அது போல, உயிர்களும் தவத்தால், நோன்பால்-அகம் நிறைந்த பக்தியால் முருக வாங்கிக் கடையும் பொழுது இறைவனும் வெளிப்படுகிறான்.

எண்ணெய் உடல் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்போல், இறைவன் திருவருள் உயிர்வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. இங்ங்ணம் இறைவனுடைய இருப்பையும், அவனை அடையும் முறையையும் அவனால் அடையத்தக்க பயனையும் ஒரே உவமையில் திருவாசகம் தெளிவாக உணர்த்துகிறது. பாடலைப் பாருங்கள்:

கொள்ளுங் கில்லெனையன் பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான் நள்ளுங் கீழுலா மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தையே!