பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருவள்ளுவர் - வாழ்வியல்
(முதல் நாள் சொற்பொழிவு)


திருக்குறள் சிறப்பு

நல்ல இலக்கியங்கள் வாழ்க்கையை மையமாகக்கொண்டு தோன்றுபவை. வாழ்க்கையை முறையாக வளர்க்கும் இயல்பின சிறந்த இலக்கியங்கள். உலக மொழிகளில் இலக்கியங்கள் காடென மண்டிக் கிடக்கின்றன. இவற்றுள் இலக்கியத்தின் தரத்தை பிரான்சிஸ் பேக்கன் என்ற ஆசிரியன் முறைப்படுத்தும்போது "சில இலக்கியங்கள் கற்கத்தக்கன. சில இலக்கியங்கள் கற்று உணரத்தக்கன. சில இலக்கியங்கள் கற்று உணர்ந்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத்தக்கன" "Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested, that is, some books are to be read only in parts, others to be read but not curiously, and some few to be read wholly, and with deligence and attention. Some books also may be read by deputy, and extracts made of them by others."-(Essays on Studies-Francis Bacon.) இந்த இலக்கிய வரிசையில் திருக்குறள் கற்று, உணர்ந்து வாழ்க்கையில்