பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 117


இட்ட பானைகளைத் தாங்கிய கம்புகள்! இவையெல்லாம் என்ன கூறுகின்றன? இவை அழுக்காற்றைத் தாக்கிக் காக்கும் காப்புச் சாதனங்களாம்! அவை காக்கின்றனவோ இல்லையோ, இன்று அழுக்காற்றின் விளையாட்டுக்கள் நம்முடைய நாட்டு அரசியலையும் தாக்குகிற அளவுக்கு வளர்ந்துள்ளன. ஆனால், அழுக்காறு அரசியலிலிருந்து தானே புறப்பட்டு மக்களை நோக்கி வருகிறது என்று சிலர் கூறுவர். அதிலும் உண்மையில்லாமல் இல்லை. சிறந்த அறிவோ, பொருட் செல்வமோ, பதவிகளோ பெற்றால் அவைகளால் விளையக்கூடிய பயன்களை வேறுபாடின்றி மற்றவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்து வாழ்ந்தால் அழுக்காறு தோன்றாது. மற்றவர் அறிவை மதிக்கின்ற பாங்கு தோன்றினால் அறிவில் அழுக்காறு தோன்றாது. செல்வம் பெற்றவர், "ஈதல் இசைபட வாழ்தல்” என்று வாழ்ந்தால் செல்வத்தின் காரணமாக அழுக்காறு தோன்றாது. பதவிகளைப் பெற்றோர் அவற்றின் பயனைத் தாம் துய்க்காமலும் பதவியைத் தாம் பெற்றிருக்கிறோம் என்பதை மற்றவர்கள் காண வேண்டுமென்பதற்காக அடக்கமின்றி ஆரவாரமாக நடந்து கொள்வதாலும் பதவியின் பயன்களைத் தன்னைச் சார்ந்தவர் சிலர் பெறவும், சாராதவர் பெற முடியாமற் போவதாலும் அழுக்காறு தோன்றுகிறது. ஆதலால் அழுக்காறு கொள்ளுதல் எங்ஙனம் தீதோ அதைவிடத் தீது மற்றவர் நெஞ்சத்தில் அழுக்காறு கொள்ளும்வண்ணம் நடப்பது என்பதை மறந்து விடக் கூடாது. அழுக்காறு தோன்றா மைக்குரிய அணைகள் - ஆள்வினையுடைமையும் வெஃகாமையும் ஆகும். ஒன்று, ஆள்வினை யுடைமை உடன்பாட்டில் துணை செய்வது; எதிர் மறையில் துணை செய்வது வெஃகாமை. தீயொழுக்கம் இல்லாதிருந்தால் மட்டும் போதாது. தீமையை நேரடியாக அகற்றும் முயற்சி மட்டும் பயன்தராது. ஒளியை ஏற்றுகிறார்கள்! இருள் இரிந்து ஓடுகிறது. இருளை ஓட்டுவார் யாருமில்லை, நன்மையைக் கொண்டுவரும்