பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெற்றவன் எனலாம். கூட்டுறவில் சமுதாயம் வெற்றி பெற்று விடுமானால் நாட்டில் உழவும் தொழிலும் பெருகும்; வளம் கொழிக்கும், ஆங்கு வறுமை இருக்காது. மார்க்சும் லெனினும் "சோஷலிச சமுதாய அமைப்பின் முதற்படி கூட்டுறவே" என்று கூறியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவம் காட்டிய ஒப்புரவு வாழ்க்கைதான் கூட்டுறவு வாழ்க்கை. அதுவே சோஷலிச சமுதாயம். ஒப்புரவுநெறி எளிதில் பொதுமைச் சமுதாயத்தைப் படைத்துத் தரும்; உலகுக்கு ஒரு தனி நெறியாக விளங்கும். வள்ளுவம் தந்த ஒப்புரவு நெறி வையகத்தின் உரிமை நெறியாகுக.

குடியியல்

திருவள்ளுவர் தனி மனித வாழ்வியல் சிறக்கவும், சமுதாயம் சிறப்புற்று விளங்கவும் நூல் செய்தார். நூல் முழுதும் தனிமனிதனை வளர்த்துச் சமுதாயத்தோடு அவனை இணைத்துச் சமுதாய அமைப்பை வளமும் வலிமையும் உடையதாக அமைக்கும் ஆர்வலராக விளங்கு கிறார். அந்தக் கங்குகரையற்ற ஆர்வத்தின் காரணமாகப் பல்வேறு அதிகாரப் புனைவுகளில் நல்ல சமுதாய அமைப்புக்கு வடிவம் கொடுத்து உறுதிப்படுத்துவதற்கு முயல் கிறார். அங்கனம் தணியாத ஆர்வத்தின் து.ாண்டுதலாகப் பிறந்த அதிகாரங்கள் "குடிமை", "குடி செயல்வகை" என்பன போலும்! முன்னர்ப் பல அதிகாரங்களில் விரித்துரைத்த செய்திகளிற் பல "குடிசெயல்வகைக்கு உரியன. அங்ங்ணம் இருந்தும் மீண்டும் "குடிமை”. "குடிசெயல்வகை” அதிகாரங்கள் அமைக்கக் காரணம் என்ன? குடிமைப் பண்பைக் காப்பதிலும் குடிசெயல்வகை இயற்றுதலிலும் சோர்வு படக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே! தாம் பிறந்த குடியை வளர்த்துப் பாதுகாப்பது தான் மனிதனின் முதற் கடமை. எவ்வளவு சோதனைகள் வந்தாலும் குடிமைப் பண்பை இழக்காது குடிசெயலில் தயங்காது செயற்படுதல் வேண்டும் என்பது வள்ளுவத்தின்