பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 149


புக்கும் ஒரோவழி மேற்கூறிய தவறுகள் செய்யவேண்டிய கட்டாயங்கள் தோன்றலாம்; செய்யவும் நேரிட்டுவிடலாம். அங்ஙணம் செய்தாலும் இல்லறநெறியில் அவை தவிர்க்க முடியாத தவறுகள் என ஏற்றுக் கொள்ளப்பெற்றுச் சான்றோரால் ஒப்புறுதி அளிக்கப்பெறும். ஆனால் துறவறத் தில் அத்தகைய தவறுதலை எக்காரணத்தை முன்னிட்டும் மறந்தும் செய்யக்கூடாது என்பது துறவறவியலின் முடிவு. இல்லற வாழ்க்கையில் பொருள் செய்யும் முயற்சி தேவை. அதற்குரிய அவா தேவை. ஆனால் துறவற வாழ்க்கையில் அது கூடாது. துறவற வாழ்க்கையில் மற்றவர் வழங்கும் துய்ப்புக்களைக் கொண்டு வாழ்ந்து, மனவமைதி பெறுதல் வேண்டும். உடைமைகளைச் சேர்த்தல் கூடாது; பாதுகாக்கவும் கூடாது. வள்ளுவம் துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு உடைமையும் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. அப்படியொரு உடைமை இருக்குமாயின் மயக்கத்தைத் தரும் என்று தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது.

"இயல்பாகும் நோன்பிற்கு) ஒன்(று) இன்மை;
உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து"

(344)

என்று திருக்குறள் கூறும். ஆனால் அதுபோலப் பெண்ணைத் துறத்தல் வேண்டும் என்று யாண்டும் கூறவில்லை. பண்டைத் தவமுனிவர் வாழ்க்கையிலும் பெண்ணைத் துறந்ததாக வரலாறில்லை. ஆனால் பின்னே தோன்றிய துறவு நெறிகள் - வள்ளுவத்திற்கு மாறான துறவு நெறிகள் நடைமுறைக்கு வந்தன. ஆசைகளை மூவகைப்படுத்துவர். மண், பொன், பெண் என்று. இம்மூன்றில் வள்ளுவம் துறக்கச் சொன்னது முன் இரண்டையும், காரணம் அவையிரண்டும் அன்பினை வளர்க்காது; வழிபாட்டு நெறியில் வழி நடத்தாது; இவறிக்கூட்டும் இயல்பினை வளர்த்து மனிதனின் தூய