பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நோக்கத்திற்காக உயிர் எடுத்துக்கொண்ட உடம்பு, பல்வேறு காரணங்களால் பயன்படாதொழியும்போது அதை நீக்கு தலை இறப்பென்றும் புதிய உடம்பைப் பெறுதலைப் பிறப் பென்றும் அறிக. பொறிகள் உடம்பினைச் சார்ந்தவை; புலன்கள் உயிரினைச் சார்ந்தவை. செயற்படும் கருவிகள் உடலினைச் சார்ந்தவை; இக்கருவிகளை இயக்கிச் செய்விக்கும் அறிவுக் கருவிகள் உயிரைச் சார்ந்தவை. உயிரினைச் சார்ந்த புலன்களும் அறிவுக் கருவிகளும் என்றும் உடலுறுப்புகளாகும்; பிரிக்க முடியாதனவாகும்; அதுவே நுண்ணுடம்பு. திருக்குறள் எழுவகைப் பிறப்பு என்று எடுத்தோதுகிறது.

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ::ஏமாப்பு உடைத்து" (396)
"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்" (62)
"எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு" (107)

ஆகிய குறள்கள் நினைவுக்குரியன. 'ஏழு பிறப்பு' என்பது வழி வழி வழக்கத்தில் கூறப்பெறும் ஒரு தத்துவம். ஓர் உயிர், தன் குறைகளினின்று நீங்கி நிறைபெற்று வளர்ந்து இன்ப அன்பினில் நிலைபெற ஏழு தடவை பொதுவாக முயற்சி செய்கிறது என்பது பொதுவிதி; நியதி. ஒன்றிரண்டு கூடுதலும் ஒன்றிரண்டு குறைதலும் நிகழக்கூடும். உயிரின் படிமுறை வளர்ச்சியில் ஆறுவகைப் பிறப்புகளைப் பொதுவாகத் தொல்காப்பியம் கூறும். அவையாவன:

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூத்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே