பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோட்பாடுகளை முறைப்படுத்தி விளங்கும் நூல் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் மிகச் சிறந்த அரசியல் நெறி முறைகள் தமிழகத்தில் விளங்கின. தமிழக அரசுகள் மிகச்சிறந்த பேரரசுகளாக விளங்கின என்பதை வரலாறு மூலம் உய்த்துணர முடிகிறது. முறையான அரசியல் நூல் தோன்றாவிடினும் சங்க காலத்தில் விளங்கிய தமிழறிஞர்கள் தமிழக அரசர்களுக்கு அவ்வப்பொழுது எடுத்துக்கூறிய அறிவுரைகள் இலக்கியங்களாக உருப்பெற்றுள்ளன. ஆக, தமிழக அரசர்கள் சங்ககாலத் தமிழறிஞர்களின் அறிவுரை வழியும், வழி வழியாக வந்த சிறப்புடை மரபுகள் வழியும் நல்லாட்சி செய்தனர் என்று தெரிகிறது.

"நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவ லெனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டாத்து
முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண்
டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாசு விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின் மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர் புறத் தார்த்துப்
பொருபடை தருஉங்
கொற்றமு முழுபடை"
"ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
அதுநற் கறிந்தனை யாயினியும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது