பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 175


அரசியலை நடத்துபவர்களுக்கன்று; மக்களுக்கேயாம். ஆனால் இத்தகைய உயர்ந்த அரசியல் தத்துவங்களால் வையகம் பெற்ற பயன்களைவிடத் துன்பமே மிகுதியாக அமைந்துவிட்டது. ஏன்? ஆட்சிபுரிவோர்கள் தடம் புரண்டு அதிகாரப் பற்றுடையவர்களாகி ஆட்சி நடத்தியதனா லேயாம்.

"நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல்
நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்(று) - உவகை
அரசர் எண்ணி விட்டார்


காட்டும் உண்மை நூல்கள் - பலதாம்
காட்டி னார்க ளேனும்
நாட்டு ராஜ நீதி - மனிதர்
நன்கு செய்ய வில்லை”

என்ற பாரதி வாக்கு இதனை உறுதிப்படுத்துகிறது. ஆயினும் மனிதகுல வரலாறு தொடங்கிய காலம் தொட்டு அரசில்லாமல் நாடுகள் இருந்ததில்லை. அஃது, ஒரு வளர்ச்சிமிக்க சமுதாயத்திற்கு அடையாளம். மதகுரு ஆட்சியில் தொடங்கித் தலைவன் ஆட்சியில் நடந்து முடியாட்சியில் தங்கிப் பின் முடிமன்னர் மதகுரு கூட்டாட்சியில் இயங்கி, யாதொரு ஆட்சியும் பயன் படாமற் போகவே மக்கள் தங்களுக்காகத் தங்களால் நடத்தப்படுகிற மக்களாட்சியை அமைத்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை முடிமன்னராட்சி போற்றுதற்குரிய வண்ணமே இருந்தது. இங்கிலாந்து, பிரெஞ்சு நாட்டு மன்னர்களின் ஆட்சியை நோக்க ஆயிரம் மடங்கு தமிழ் மன்னர்களின் ஆட்சி விழுமியது. உலக அரசியல் வரலாற்றிலேயே நீதிக்காகத் தன் உயிரையே கொடுத்த தமிழ்நாட்டு அரசர்கள் போல் யாண்டும் இல்லை. ஆதலால் நல்ல முடியரசு திகழ்ந்த நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் அறத்தோடு கூடிய முடியாட்சியையே ஏற்றுக்கொள்கிறார். திருக்குறள் காட்டும்