பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்க. பண்டையத் தமிழசு ஆட்சியில் முறைப்படுத்தப் பெற்ற பாராளுமன்றங்கள் இல்லை. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற அமைப்புத்தானிருந்தன. சங்ககாலச் சான்றோர்கள் பாராளுமன்றங்கள் செய்த பணியைவிடச் சிறப்பான பணியை அரசியலுக்குச் செய்துள்ளனர். அவர்கள் அரசுக்கு எடுத்துக்கூறிய அறிவுரைகள் இன்றைக்கும் பயனுடையன. அரசை நடத்த நிதி தேவை. நிதியை மக்களிடத்தில் வரியாக வசூலிப்பதென்பது பொதுவான அரசியல் நியதி. ஆட்சிமுறை; இங்ஙனம் வரி விதித்து வசூலிப்பதில் வரியின் மிகுதி, வரியை முறையாக வசூலிக்காமை ஆகிய குற்றங்கள் அரசிடம் கண்ட பொழுது,

"காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதய எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத் தானும்
உண்ணான் உலகமும் கெடுமே”

(புரம் 184)

என்று பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்குச் செவி யறிவுறூஉவாக இடித்துரைத்தமை காண்க, குடி மக்களின்வருவாயில் ஆறில் ஒரு பங்கை அரசு வரியாகப் பெறலாம் என்று திருக்குறள் உரையாசிரியர் கூறுவர், ஆனால் திருக்குறள் குடிமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை, வரியின் அளவை அறுதியிட்டுக் கூறவில்லை . செப்பமான அரசியல் நூல் செய்த திருவள்ளுவர் வரி -- வரியின் அளவுபற்றிக் குறிப்பிடாதது ஏன்? அரசிற்குரிய