பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 183


அதிகாரம் செய்யவில்லை-ஏன்? பொருளியில் பற்றிய கருத்துக்களைப் பொருளுடைமை என்று பேசாது, "பொருள் செயல் வகை" என்று கூறுவதின் விளக்கம் என்ன? பொருள் இயற்கையில் வந்து அமைவதன்று. பரம்பரையாகவும் கிடைக்கக்கூடாதது. பொருள் செயற்பாலதாகிய முயற்சியின் பாற்பட்டது என்பது தெளிவு. அது மட்டுமின்றி "ஊக்க முடைமை" அதிகாரத்தில் "உள்ளம் உடைமை" என்று கூறி உழைக்கும் உள்ளமே உடைமை என்றும் கூறி உறுதிப்படுத்துகிறது. மனிதனுக்குரிய செல்வம் அவனுடைய அறிவு உழைப்புக் கரங்களின் வழி வரவேண்டும் என்பது தான் இயற்கை நியதி; அரசியல் நெறி, உடைமைகள் பரம்பரையாக வருவதை வள்ளுவம் ஏற்கவில்லை; அதுமட்டுமல்ல. ஒருவருடைய உழைப்பின் பயன் இன்னொருவருக்கு உடைமையாவதையும் வள்ளுவம் மறுக்கிறது. அதனால் ஒவ்வொரு குடிமகனையும் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும் என்றே திருக்குறள் ஆற்றுப் படுத்துகிறது, "உள்ளம் உடைமை உடைமை", "செய்க பொருளை', 'தாளாற்றித் தந்த பொருள்” என்ற குறள்வரிகள் நினைவுகூரத்தக்கன. ஒருவர் உழைப்பிலிருந்து மற்றொருவர் முறைகேடாகப் பொருள் செய்து வாழ்தல் பழித்தொடர்புடையன என்று இழித்துக் கூறி மறுக்கிறது. இதனை,

"பழியஞ்சிப் பாத்துரண் உடைத்தாயின் வாழ்க்கை

வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்"

(44)

"சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று"

(660)

என்னும் குறள்கள் வழி அறிக. பொருள் செய்யும் முயற்சியில் பழி எது? செல்வத்தை உற்பத்தி செய்தவனுக்கு உழைப்புக்கும் உற்பத்திக்கும் ஏற்பப் பங்களிக்காமை, பழியாகும். நெறிமுறை பிறழ்ந்து வாழும் ஒருவன் செல்வத்தைக் குவித்து வைத்துள்ளான் நாளும் உழைத்து வாழும் செந்நெறியில்