பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது குறள். பொருட் செல்வத்தை வகுத்தளித்தல் என்பது அரசின் தலையாய பணி; கடமை. இந்தப் பணி செம்மையாக நடைபெறாத நாட்டில் சிலர் ஆரத் துய்ப்பர்; பலர் நல்குரவால் வாடுவர். முறையான பங்கீட்டு முறை உள்ள நாட்டில் தான் செல்வத்தை உற்பத்தி செய்தற்குரிய கிளர்ந்தெழு எழுச்சியும், உற்பத்திப் பெருக்கமும். ஒழுக்க நெறிக்கோட்பாடுகளும், அரசின் விதிமுறைகளை மீறாத குடிகளும் அமைய முடியும். பொருளை வகுத்தளிக்கும் வழியில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தேவைக் கேற்ற ஊதியம் என்ற சமநிலைச் சமுதாயம் அமையத் துணை செய்யும். உழைத்தற்கியலாத உடல் ஊனமுற்றோர் முதியோர் ஆகியோர் பேணப்பெறுவர். மேலும் புதிய பொருள்களை உற்பத்தி செய்யப் புதிய திட்டங்கள் தயாரிக்கப்பெற்று அத்திட்டங்களின் நிறைவேற்றுப் பணிக்கும் நிதி ஒதுக்கப்பெறும், இன்று பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குறை, பொருட் பங்கீட்டுமுறை சீராக நடைமுறைப்படுத்தப் பெறாததேயாம். வல்லவர்களும், அரசின் கடைக்கண் பார்வையில் குளிப்பவர்களும் அரசு உறுப்புகளுக்கு இரைபோட்டு இங்கிதமாக நடக்கத் தெரிந்தவர்களும் கோடி கோடியாக அடுக்கி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதேபோழ்து, அறுபது விழுக் காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுகூட உறுதியாகப் பெற முடியாத நிலையில் அவமருகின்றனர். இது குறித்து “எதிர் காலங்களுக்கிடையே உராய்வுகள்” பற்றி ஆராய உலகளவில் அமைத்த குழுவின் "ஆய்வறிக்கை" இந்திய மக்களில் சரிபாதி பேர் கொடிய வறுமையில் உழலும் காட்சியை 20 ஆண்டுகளில் காணலாம் என்று கூறியுள்ளதை அறிக. இந்த நிலையில் 1955ஆம் ஆண்டிலிருந்து சோஷலிச பஜனை" பல்லவி அனுபல்லவியாகப் பாடப்பெற்று வருகிறது. யாதொன்றும் நடந்தபாடில்லை, சுரண்டல் பொருளாதாரமே வளர்கிறது. சில தர்மச் செயல்கள் கடன்