பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 189


உணர்வதில்லை. வளமான வாழ்வு பெறாதவர்கள் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். சிந்திக்க முடிவதில்லை. அவர்களுக்குத் தற்காலிக நலன்களே முக்கியம். அது அவர்கள் குறையன்று. சமுதாய அமைப்பு முறை அவர்களை அப்படி உருவாக்கி உள்ளது. சமுதாய அமைப்புக் காரணமாகச் சிலர் மன அமைதி இழக்கின்றனர். அவர்கள் தீவிரமாகச் சிந்தித்து முயன்று சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளாமல் மனக்கவலையை மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள்; உணர்ச்சி வசப்படுகிற வர்கள். சமுதாய அமைப்பு உணர்ச்சிக்குத் தீனி போடுகிறது. அது ஆறுதல் தருவதில்லை; அமைதியைத் தருவதில்லை ; பழித்துக் கூறும்; தூற்றும். அது வளர்ச்சியடையாத சமுதாய இயற்கை; அச்சமுதாயத்தினர் பேச வேண்டுவன பேச மாட்டார்கள்; தத்தம் மனத்தளவே பேசுவார்கள். இவ்வாறு பாதிப்புக்கு ஆளானவர்கள் மனவமைதியைப் பெறக் கள்ளுண்கின்றனர். இந்த ஒழுக்கக்கேடு முற்றாக நீக்கப்பட வேண்டுமானால் திறமைக்கேற்ற உழைப்பு வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவேண்டும். நல்ல வண்ணம் உண்டு மகிழ்ந்து வாழ -- நுகர்வுப் பொருள்கள் எளிதில் நியாய விலையில் கிடைக்கவேண்டும். ஊதியத் திற்கும் நல் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள இடைவெளி சுருங்கவேண்டும். மனித வாழ்க்கை சோற்றினால் மட்டும் ஆனதல்ல. உள்ளத்திற்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. களிப்பை மகிழ்ச்சியைத் தரக்கூடிய அமைப்புக்கள் நிறையத் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களை மகிழ்விப்ப தற்கு என்றே அமையக்கூடிய குடும்பங்களும், நட்புக்களும் சமுதாயமும் அரசும் அமையவேண்டும். இங்ஙனம் அமைந்துள்ள வாழ்க்கை முறை, சமுதாய முறை எப்போது இருந்தது? எப்போது வரும்? ஒழுக்கத்தின் ஊற்றுக்களனாக அமைந்து ஒழுக்கத்தை உறுதிப்படுத்தி வளர்க்கும் பொறுப்பு சமுதாயத்தினுடையதாகும்; அரசினுடையதாகும். இந்த