பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்




நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தருஉம்" (சிலம்பு 3-26, வரி 9-12)

என்று கூறினான். வடபுலத்து வெற்றிக்குப் பிறகு மூவரில் விஞ்சியவன் என்று உணர்வுக்கு இரையாகிவிட்டான். அதனால் போர்க்கைதிகளைச் சோழன், பாண்டியன் அவைக்களத்திற்கு அனுப்பி அவர்களின் புழுக்கத்தைப் பெறுகிறான். இளங்கோவடிகளின் தமிழினத்தின் ஒருமைப்பாடுபற்றிய நினைவு பயன்படாக் கனவுகளாகிப் போயின. ஆனால் இளங்கோவடிகள் தோற்ற இடத்தில் இருபதாம் நூற்றாண்டில் ஒருவர் வெற்றிபெற்றார். ஆம்! அந்த வெற்றி தமிழக வரலாற்றிலேயே சிறப்புடைய வெற்றி.

"துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்" (159)

என்ற திருக்குறளுக்கு ஏற்ப அவர் வாழ்ந்ததால் வரலாற்றில் வெற்றி பெற்றார். இழித்தும் பழித்தும் பேசிய பேச்சுக்களுக்கெல்லாம் அவர் எதிர்ப் பேசவே இல்லை.

"இகல்எதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகல்ஊக்கும் தன்மை யவர்" (855)

என்பது குறள்.

இந்தத் திருக்குறளுக்கு ஏற்ப அவர்மீது காரணமில்லாமல் இகல் கொண்டு அவருடைய முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களைப் பரப்பினாலும் மாறுகொண்டு எதிர்தாக்குதல் செய்யாது சாய்ந்தொழிகினார்.

"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கேடும்” (1023)

என்ற குறள் நெறியின்படி தமிழினத்தாரிடத்தில் தமிழினத் தலைவர்களிடத்தில் பொய்ம்மையான மானத்தைப் பெரிது எனக் கருதாது அவர் ஒழுகிய பெருந்தன்மையை,