பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைதலில் மாறலாம். அரண் அமைவாக அமைந்துவிடில் நாடு, பகைவர் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகாது. பல ஆண்டுகள் அமைதியாக வாழ முடியும். அப்படி வாழுதற்குரிய முறையில் அரண் அமைய வேண்டும் என்றும் திருக்குறள் கூறுகிறது.

"எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்” (746)

என்று மேலும் கூறுகிறது. பாரியின் பறம்புமலை இத்தகைய அரனுடையதாக இருந்தது என்று புறநானூறு பேசும்.

"அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே

இரண்டே தீஞ்சுவைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவிழ்க் கும்மே
நான்கே அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
தனிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்

"புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்"
தாளிற் கொள்ளலிர் வாளில் தாரலன்" (புறம் 109)

அதனால் மூவேந்தர்கள் பல ஆண்டுகள் பொருதியும் எளிதில் பறம்பு மலை கைப்பற்றப்படவில்லை. நிலத்து வழிப்போர் அமையின், திருக்குறள் காட்டும் அரண் மிகச் சிறந்த பாதுகாப்புடையது. திருக்குறளுக்குப் பின்னே இளங்கோவடிகள் காலத்தில் அரணில் பொறியியல் அமைப்பு வந்துவிட்டது. அரணைப்பற்றிப் பல்வேறு வகையாகத் திருவள்ளுவம் வலியுறுத்திக் கூறினாலும்