பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேவை. எது முதலில்? எது இரண்டாவது நிலையில்? முடியாட்சிக் காலத்தில் நல்ல குடிமக்கள் ஆட்சியின் வழி அமைவர். "அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்ற பழமொழி அறிக. குடியாட்சிக் காலத்தில் நல்லாட்சி அமைய நல்ல குடிமக்கள் தேவை. "வாக்காளர்களின் நாணயத்திற்கும், தரத்திற்கும் ஏற்பத் தேர்ந்தெடுக்கப் பெறுபவர்களுடைய தரமும் தகுதியும் அமையும்” என்றார் பெர்னார்ட் ஷா, திருவள்ளுவர் சிறப்புடைய சில நெறிகளை அதற்கென்று அமைந்த அதிகாரத்தில் மட்டுமல்லாது வேறு அதிகாரங்களிலும் எடுத்துக்கூறி வலியுறுத்தும் இயல்புடையாளர்; உதாரணமாக,

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (322)

என்ற திருக்குறளைப் பொதுநோக்கில் பார்த்தால் ஈதல் அல்லது ஒப்பரவறிதல் அதிகாரத்தைச் சேர்ந்த குறள் போலத் தோன்றும். ஆனால் இந்தத் திருக்குறள் அமைந்திருக்கும் அதிகாரம் கொல்லாமையாகும். இத்திருக்குறளைக் கொல்லாமை அதிகாரத்தில் ஓதி அறிவுறுத்தும் செய்தி சிந்தனைக்குரியது. வாழப் பிறந்தோருக்கு வாழ்வளிக்கா மலும் அவர்களைச் சாகடிப்பதும் கொலையே' என்று வள்ளுவம் கருதுகிறது.

வையத்து மாந்தர்க்கெல்லாம் வாழ்வளிப்பதற்குரிய செல்வப் பங்கீட்டு முறையை முறையாக நடைமுறைப்படுத்தி வாழ்வளிக்காதது கொலை செய்யும் குற்றத்திற்கு ஒப்பானது என்று கூறும் குறள் நெறியை சமுதாயப் பொது நெறியை உலக அரசுகள் நடைமுறைப்படுத்துமானால் எங்கிருந்து வரும் வறுமை! அடுத்து 'குடிமை' அதிகாரம். இன்றைய கல்வித் திட்டத்தில் 'குடிமைப் பயிற்சி' (citizenship) என்ற பயிற்சி இருக்கிறது. வள்ளுவம் கண்டதே இந்தக் குடிமைப் பயிற்சி. ஆனால் குடிமை என்ற அதிகாரத்தில் குடிமைக்குரிய