பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 215


திருக்குறள் ☆ 215

வறுமையா? என்று வள்ளுவர் கேட்கும் கேள்வியில் ஆயிரமாயிரம் சிந்தனைப் புதிர்கள் அடங்கியுள்ளன.

"இன்றும் வருவது கொல்லோ? நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு" (1058)

என்பது திருக்குறள். “இன்றும் வருவது கொல்லோ" அம்மம்ம. வினாவில் தான் எவ்வளவு அழுத்தம்: சாடுதல்? நினைந்து பார்க்க நெஞ்சில்லாமல் போய் விட்டதோ? 'இன்றும் வருவது கொல்லோ' என்ற வினாவில் திருவள்ளுவர் எதை எதைச் சாடுகிறார் என்று கூர்ந்து நோக்குங்கள். நேற்று வறுமை இருந்தது; அது நேற்றைய தவறாக இருந்து தொலையட்டும். நேற்றைப் பட்டறிவு என்னாயிற்று? நேற்றிருந்த வறுமையை மாற்றி ஒருவருக்கொருவர் துணை நின்று வாழத்தானே சமுதாய அமைப்பு தோன்றிற்று? அந்தச் சமுதாய அமைப்பு இன்று உயிர்ப்போடிருக்கிறதா? உணர்வோடு தொழிற்படுகிறதா? அது ஏற்றுத் தாங்கி வளர்ப்பதற்குப் பதிலாகக் கேவலமாகப் பழிக்கிறதே! ஏழை என்று ஏளனம் செய்கிறதே! ஏளனத்திற்குப் பயந்து ஒளிந்து வாழக் கடனாளியாக்குகிறதே! கடன் வாங்கும் திறனில்லையானால் மரண வழிக்குச் செலுத்துகிறதே! இன்றைய சமுதாய அமைப்பு, தாங்கும் அமைப்பாக இல்லை. அது சுழன்றடிக்கும் சாட்டைபோல் இருக்கிறது. இது சமுதாய அமைப்பன்று. இஃதொரு கூட்டம். அவ்வளவுதான். பயன் என்ன? இந்த வறுமையை மாற்றத்தானே மனிதகுலத்தின் தலைவனாகக் கடவுளைக் கண்டோம். அவன் தந்தை தாய்; அவன் மக்கள் நாம்; அவனுடைய பிள்ளைகளில் வல்லார் மாட்டார் என்ற வேறுபாடு இல்லை. இந்தப் பொது நெறிகண்டு கூடியுழைத்து உண்டு மகிழத்தானே கடவுள் நெறியைக் கண்டோம். அதைக்கண்ட பிறகும் இன்னும் வறுமையென்றால் அக்கடவுள் நெறி என்னாயிற்று? ஆம். கடவுள் புரோகிதர்களிடத்தில் சிக்கிவிட்டார். சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தருவதில்லை. காரணம்