பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 251


செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று அருணந்தி சிவாச்சாரியார்; செல்வத்தால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று ஜார் பேரரசன். பதவியினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று நான்முகன். தவத்தினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று கொங்கண மாமுனி. ஆதலால், திருவள்ளுவர் அறிவு, செல்வம், புகழ், பதவி முதலிய இல்லாதார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பதைவிட இவையனைத்தும் உடையார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பது ஆபத்தானது என்று குறிப்பிடுகிறார். ஆம், செல்வத்திற்குப் பிறிதொரு செல்வமாகத் திகழக் கூடியது அடக்கமுடைமை. ஆதலால், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அடக்கமுடைமை விரிந்த ஒழுக்க நெறி. ஒழுக்கத்தின் பாற் பட்டதாகவும் அடக்கத்தினைக் கருதலாம். கற்றோர் போற்றும் கலித்தொகை, அடக்கம் அறிவால் சிறந்ததென ஆராயப் பெற்று முடிவு ஏற்றுக்கொள்ளப் பெற்றது எனக் குறிப்பிடுகிறது. வேண்டியவாறு ஒழுகுதலை அடக்கமின்மை என்றும், ஆற்றல் இருந்தும் அடங்கி நிற்றலே அடக்க முடைமை என்றும் கலித்தொகை பேசுகிறது.

புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி

என்பது கலித்தொகை தோற்றத்தால் புரவலன்-வாரி வழங்குவதில் வள்ளல்-எனினும் இரந்து வாழ்வோர் கூறி இரக்கின்ற பணிவான மொழிகளைச் சொல்லிப் பழகுகின்றானாம். இதற்குப் பழங்கால அரசர்கள் புலவர் களிடத்தே பழகிய முறையைச் சான்றாகக் காட்டலாம்.

"கொள்ளிக் கட்டை கூரையைக் கொளுத்தும் ஆற்றல்
உடையது. ஆயினும் கூரையைக் கொளுத்துமுன்,
கூரையில் செருகப் பெற்ற பொழுது அது பலருக்குத்