பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 267


அமையுமென்றால், அவர், பொருள் செயல் வகை என்று ஆணையிட்டுப் பொருள், பிறப்பால் அமைவதன்று, செயற்பாலதே, என்று விளக்கியிருக்கமாட்டார். அடுத்து ஊழ் அதிகாரத்திலும் கூட, "சூழின் துய்த்தல்” போன்ற வினைச்சொற்களின் அடிப்படையிலேயே ஊழின் வலி யுறுத்தல் பேசுகிறார்.

“ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்." (380)
"வகுத்தான் வருத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." (377)

என்பன இங்கு நோக்கத் தக்கன:

ஆதலால், அவ்விய நெஞ்சத்தான் கண் .ஆக்கம் முறையானதன்று. அதில் ஏதோ தவறு இருக்கின்றது; சூது இருக்கிறது; ஆராய்ந்து அவ்விய நெஞ்சத்தானிடம் உள்ள ஆக்கத்தை அகற்றுக! என்பதே வள்ளுவர் ஆணை! செவ்வியான் -- செம்மை நலமுடையான் - செம்மை நலத்துள் பிறரை வஞ்சித்து வாழாததும், பிறர் பங்கைத் திருடாததும் அடங்கும். காலம் என்ற களத்தில் நின்று உழைத்தல் உயர்ந்தோரியல்பு. இங்ஙனம் உழைத்திடும் உத்தமர்கள் வறுமையால் கேடுற்றிருப்பது புரியாத புதிர்! “ஆக்கத்திற்குரிய அனைத்துப் பண்புகளும் இருக்கக் கேடு எப்படி வந்தது? ஆராய்க!" என்று ஆணையிடுகிறார் வள்ளுவர். "ஆராய்ந்தால், செவ்லியார். கேடு நீதிக்கு முரண்பட்டது; கேட்டினை உடன் அகற்றுக!” என்பது வள்ளுவரின் ஆணை!

செவ்வியான் கண் இருக்கவேண்டிய ஆக்கம், அவ்விய நெஞ்சத்தான் கண்ணும், அவ்விய நெஞ்சத்தான் கண் இருக்கவேண்டிய கேடு செவ்வியான் கண்ணும் இடம் மாறி விட்டன. இடம் மாறினமைக்குக் காரணம், அவ்விய