பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 271


அகற்றப்படும். நீதி நிலைநிறுத்தப் பெறும். இவ் வழியில் விருப்பு வெறுப்புக்கள் குறையும். தங்கத்தின் தரத்தைக் காட்டும் உரைகல்லில் - கட்டளைக் கல்லில் தங்கத்தை உரசிப் பார்த்துக்கொள்ளும் பொழுது கொள்வோருக்கும், கொடுப்போருக்கும் இடையே இருந்த அவநம்பிக்கை அகன்று விடுகிறதல்லவா? அதுபோலவே, நீதியில் வைத்துப் பார்க்கும்பொழுது, மாறுபட்டவர்களின் மனமருட்சிகள் நீங்க வேண்டும். ஆனால் இப்பொழுது அப்படி நீங்குவதில்லை. ஒன்றன்பின் ஒன்றாகப் பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்துத் தொல்லைகள் தருவதைக்கூட ஒரு தொழிலாக, பழிவாங்கும் ஒரு கருவியாகக் கையாளுகிறார்கள். நீதி தேவதை நீதிமன்றங்கள் வழியாகவும் நீதி கிடைக்கும்படிச் செய்யலாம். நீதி வேட்கையுடைய பல மனிதர்களிடத்தே சிந்தனையைத் தூண்டி புரட்சியை விளைவித்து நீதியை நிலைநாட்டவும் செய்யலாம். இம்முறையே சாலச் சிறந்தது. காரணம், புரட்சி செய்தவர்கள் நீதியை உணர்கிறார்கள். இது ஒரு பெரும் படிப்பினை. அநீதிக்கு ஆளாகிறவன், தனி மனிதனல்லன். அவன் ஒப்பற்ற மானிடச் சமுதாயத்திற்கு உடைமையான ஓர் உறுப்பினன். அவனுடைய துன்பத்திற்காக அவனே நொந்து அழுதல் சமுதாய மரபன்று - என்ற சமுதாய உணர்ச்சி மேலோங்குகிறது. இன்று வளர்ந்து வரும் சமுதாயத்தின் நல்ல அறிகுறி, இந்த அடிப்படையில் தானே. இறந்த வீட்டில் ஊராரும், உற்றாரும் சேர்ந்து அழும் நடைமுறை தோன்றியிருக்க வேண்டும். கணவனை இழந்த பெண் அழுகிறாள். அவளுக்கு உண்மையிலேயே இழப்பு. அவளோடு கூடி இன்னும் பல பெண்களும் அழுகிறார்களே அவர்களுக்கு என்ன இழப்பு: அவள் ஒருத்தியினாலேயே அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அழுது தீர்க்க முடியாது என்பதனால் துன்பத்தில் பங்கு போட்டுக் கொண்டு அழுகிறார்கள். கணவனை இழந்தவள்