பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடுத்து பிறரிடத்தில் காணப்படும் குற்றங்களுக்குத் தன்னிடத்தில் உள்ள குற்றங்கள் எவ்வளவுக்குக் காரணமாக அமைந்து கிடக்கின்றன என்பதைப் பார்க்கக்கூடிய தைரியம் ஏற்பட்டு சுய விமரிசனத்திற்கு உரிய அறிவு பெற்றுத் தன்னுடைய குற்றங்களை நீக்கிக் கொண்டால் பிறருடைய குற்றங்களும் நீங்கிப் போகும். அதன் மூலம் சமுதாயத்தில் குற்றங்கள் குறையும்; நிறை பெருகும்; பகை மாறும்; பண்பு வளரும். இதனையே இந்த அறநெறியை இந்தக் குறள் வலியுறுத்துகிறது. அதாவது ஒழுக்கக்கேடு என்பது ஒருவரை மையமாகக் கொண்டது மட்டுமன்று; பலரை -- அதாவது மனித சமுதாயத்தை மையமாகக் கொண்டு வளருவதே ஒழுக்க நெறி.

இந்தக் குறள் புறங் கூறாமையில் இருக்கிறது. புறங் கூறுகிறவர்கள் நேரடியாகச் சொல்லுதற்குரிய ஆளுமையும் அசைவிலா உறுதியும் இன்மையின் காரணமாகவே புறங் கூறுகிறார்கள். புறங்கூறுவதே ஒரு குற்றம் என்று கருதும் அறிவு இருக்குமானால் புறங்கூறமாட்டார்கள். அவ்வழித் திரிபுகள் ஏற்படா. ஒரு தவற்றில் பலர் பங்கு ஏற்கக்கூடிய வாய்ப்பும் தடைப்படும். காலமும் மிஞ்சும். மனித சக்தியும் மிஞ்சும். பகையும் குறையும். எதிர்பார்க்கின்ற குறைகளும் நீங்கி, நிறைகளும் ஏற்படும்.

ஆதலால் பிறர் குற்றம் காண்பதற்கு முன் நமது குற்றத்தை நாமே பார்த்துக் கொள்வோமாக.

நாம் அனைவரும் நல்லவர்களாகி அவ்வழி மற்றவர் களையும் நல்லவர்களாக வாழச் செய்வோமாக!

பயனில சொல்லாமை

ன்றைய உலகியலில் பேச்சு அதிகம். மனிதர்கள் தம்முள் ஒரு சிலர் கூடினாலும் பேசித் தீர்க்கிறார்கள். பலர் கூடினாலும் (கூட்டங்கள் என்ற பெயரில்) பேசித்